தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா- ’9ஆம் தேதி முதல் வண்ண அட்டைகள்’

நாமக்கல்: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வருகின்ற 9ஆம் தேதி முதல் அனைத்து குடும்பங்களுக்கும் வண்ண அட்டைகள் வழங்கப்படும் என்று நாமக்கல் எஸ்.பி. அருளரசு தெரிவித்துள்ளார்.

police
police

By

Published : Apr 8, 2020, 11:19 AM IST

நாமக்கல் நகராட்சியில் கரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மேற்கோள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”நாமக்கல் மாவட்டத்தில் 144 தடையை மீறியதாக இதுவரை 1,536 வழக்குகளில் 1, 678 பேர் கைது செய்யபட்டு 1,052 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து வருகின்ற 9ஆம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நீலம், பச்சை, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் அட்டைகள் வழங்கபட உள்ளன.

அரசு தரப்பில் வழங்கப்படும் வண்ண அட்டைகள்

இந்த அட்டைகளை பயன்படுத்தி வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளியே வந்து பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். அதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் வெளியே சுற்றுவதை மூன்றில் இரண்டு பங்கு கட்டுப்படுத்த முடியும்" என்றார்.

இதையும் படிங்க:உலக நாடுகள் இந்த பெருந்தொற்றுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details