நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலா மாளிகையில், கரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று (மே.24) சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியர் மெகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன் ’’நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்ததாகவும், மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடய படுக்கை வசதிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 16 மருத்துவர்களும், 45 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்
தொர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் இறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 2,450 படுக்கைளில், தற்போது 1,797 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. மீதம் 653 காலியாக உள்ளதாகவும், ஆக்சிஜன் வசதி கொண்ட 768 படுக்கைகளில் 747 படுக்கை நிரம்பி உள்ளதாகவும், அதில் 21 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும், மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.