நாமக்கல் மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து சிறையில் அடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ், காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ரவுடிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் நகர் பகுதிகளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரவீன் பாண்டியன், சபரிநாதன், பிரவீன், ஜீவா, பிரபு, கார்த்திக் ஆகிய ஆறு ரவுடிகளை கைது செய்தனர்.
அதேபோல் சிறைக்கு சென்று திரும்பிய ரவுடிகள் என மாவட்டம் முழுவதும் 71 ரவுடிகளை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடியின் சமாதியில் பட்டாக்கத்தியுடன் சக ரவுடிகள் சூளுரை!