தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் 1,140 காவல் துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணி

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாமக்கல்லில் 679 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,140 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தேர்தல் பாதுகாப்பு பணி
தேர்தல் பாதுகாப்பு பணி

By

Published : Feb 18, 2022, 7:57 AM IST

நாமக்கல்: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில் உள்ள 439 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 1,748 நபர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் வாக்குப்பதிவு நாளை (பிப்ரவரி 19) நடைபெறுகிறது.

நாமக்கல்லில் சுமார் ஐந்தரை லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 679 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் என சுமார் 1,140 நபர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள சுமார் 120 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

இந்த வாகனங்களில் காவல் துறையினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்களை ஏற்றிக்கொண்டு வாக்குச்சாவடிகளுக்கு சென்றனர். வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:மாலை அணிவிக்க நெருங்கிய பாஜகவினர்: ராஜ்நாத்துக்கு அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details