சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (38). விவசாயியான இவர் மே 4ஆம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பியபோது அவரது மனைவி உஷாராணி (35), மகள்கள் மோனிஷா (15), கோகிலா (9) மகன் உலகநாதன் (11) ஆகிய நான்கு பேரையும் காணவில்லை.
'மனைவி, 3 பிள்ளைகள் மாயம் ' - விவசாயி புகார்
நாகப்பட்டினம்: சீர்காழி அருகே தன் மனைவி, மூன்று குழந்தைகளை காணவில்லை என காவல் துறையிடம் விவசாயி புகார் அளித்துள்ளார்.
'மனைவி, 3 குழந்தைகள் மாயம் ' கணவர் புகார்
எங்குத் தேடியும் அவர்கள் கிடைக்காததால், வேறுவழியின்றி கோபாலகிருஷ்ணன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான நால்வரும் எங்கே சென்றார்கள் என விசாரணை மேற்கொண்டு வருகின்னறனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.