கரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் அனைத்தும் நாற்பது நாள்களுக்குப் பிறகு இன்று (மே.07) திறக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுபானக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டம் வண்டிப்பேட்டை பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பாக அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுக்கு எதிராக பதாகைகளை கையில் ஏந்தியபடி பெண்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒருமாத காலத்திற்கு மேலாக மதுபானக் கடைகள் திறக்காமல் இருந்த காரணத்தால் வீட்டில் நிம்மதியாக இருந்ததாகக் கூறும் அப்பகுதி பெண்கள், தற்போது கடைகள் திறக்கப்பட்டால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வேதனையோடு தெரிவித்தனர்.
எனவே சட்டவிரோத செயல்களை குறைக்க அரசு, மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.