தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழப்பு!

மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராயம் குடித்தவர்களில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழப்பு!
மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் குடித்து இரண்டு உயிரிழப்பு!

By

Published : May 30, 2021, 12:19 PM IST

Updated : May 30, 2021, 1:38 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடியைச் சேர்ந்தவர் பிரபு (33). அச்சகத் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வம் (36), வீராசாமி(52), சரத்குமார் (28), செந்தில் (40), சரண்ராஜ் ஆகிய ஆறு பேருடன், அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்தனர்.

அப்பகுதியில் இருந்து வீடு திரும்பியவர்களில் இருவருக்கு, சிறிது நேரத்தில் கண் பார்வைப் பாதிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட பிரபுவை அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பலனின்றி பிரபு இறந்தார்.

தொடர்ந்து செல்வமும் பரிதாபமாக வீட்டிலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, வீராசாமி, சரத்குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாரயத்தைக் குடித்த இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக முதல் கட்ட விசாரணையை மயிலாடுதுறை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் இயங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதைச் சாதகமாக்கி, மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும், சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் விற்பனை, மதுபானங்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கரோனாவால் வீட்டில் தனிமை இருப்பவர்களிடம் தொலைப்பேசியில் உரையாடிய அமைச்சர்கள்!

Last Updated : May 30, 2021, 1:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details