தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருவேல மரங்கள் அகற்றம்; மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

மயிலாடுதுறை: குத்தாலத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சும் கருவேல மரங்களை அகற்றி நாட்டு மரக்கன்றுகள் நடும் பணி இன்று நடைபெற்றது.

planting saplings in kuthalam
planting saplings in kuthalam

By

Published : Nov 10, 2020, 10:57 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேரடிப் பகுதியில் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சிக்குச் சொந்தமான 15 ஆயிரம் சதுரஅடி நிலப்பரப்பில் நிலத்தடி நீரை உறிஞ்சும் கருவேல மரங்கள் படர்ந்து வளர்ந்திருந்தன. இதையடுத்து கருவேல மரங்களை அகற்றி அங்கு நாட்டு மரக்கன்றுகளை நட்டு
பராமரிக்க குத்தாலம் லயன்ஸ் சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஒரு வார காலமாக கருவேல மரங்கள் ஜேசிபி
இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டன.

அதன்பின் இன்று 1,200 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், அந்த மரக்கன்றுகளைப் பராமரித்து வளர்க்கும் விதத்தில் கம்பி வேலி பாதுகாப்பு மற்றும் நீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறுங்காடு வளர்ப்புத் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குத்தாலம் பேரூராட்சிச் செயல் அலுவலர் பாரதிதாசன் கலந்துகொண்டு திட்டத்தை தொடக்கி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details