17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறையை கைப்பற்றினார் ராமலிங்கம்!
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம், இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 499 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராமலிங்கம் தனக்கு பின்வந்த அதிமுகவின் ஆசைமணியை இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 499 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம், கடந்த 1970ஆம் ஆண்டில் திமுக மாணவர் முன்னேற்றக் கழக செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். மேலும், கடந்த 1977ஆம் ஆண்டு முதல் நான்கு முறை திருவிடைமருதூர் எம்எல்ஏவாக இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.