தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன்களுக்கு வைக்கப்பட்ட விஷம் - குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!

நாகை: குளத்தில் வளர்க்கப்பட்ட மீன்களுக்கு விஷம் வைத்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர், வலை வீசித் தேடி வருகின்றனர்.

பண்ணை மீன்கள்  குளத்து மீன்கள்  பண்ணை மீன்கள் இறப்பு  குளத்து மீன் இறப்பு  Pond Fish Death  Pond Fish  Fish Death  Fish
Pond Fish

By

Published : Apr 28, 2020, 5:14 PM IST

நாகையை அடுத்த தெத்தி புதுரோடு சாலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ், மலர்க்கொடி தம்பதி. இவர்கள் சொந்தமாக வெட்டப்பட்ட பண்ணைக்குட்டையில் மீன்களை வளர்த்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடல்மீன்கள் கிடைப்பதில்லை.

இதனால், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இவர்களுக்குச் சொந்தமான குளத்தில் மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியினரை எச்சரித்து செல்வராஜ் குளத்தைச் சுற்றி யாரும் வரமுடியாத அளவிற்கு, கம்பி வேலி அமைத்துள்ளார்.

குளத்தில் இறந்து கிடக்கும் மீன்கள்

இந்நிலையில், இன்று காலை செல்வராஜ் மீன்பிடிக்க குளத்திற்கு வந்தபோது மீன்கள் அனைத்தும் உயிரிழந்து மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து செல்வராஜ் நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details