தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சவுடு மண் திருடர்களைக் கைது செய்த காவல் துறை

நாகப்பட்டினம்: செம்பனார்கோவில் அருகே அரசு அனுமதியின்றி சவுடுமண் எடுத்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சவுடுமண் திருடர்களை கைது செய்த காவல்துறை
சவுடுமண் திருடர்களை கைது செய்த காவல்துறை

By

Published : Apr 22, 2020, 4:19 PM IST

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் கிராமத்தில் சித்தார்த்தன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அதிகாலை ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி அரசு அனுமதியின்றி, பொக்லைன் இயந்திரம் மூலம் சவுடு மண் எடுத்துக்கொண்டு இருப்பதாக, செம்பனார்கோவில் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சவுடு மண் திருடர்களைக் கைது செய்த காவல் துறை

இந்நிலையில் உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் பாபுராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் இரண்டு டிராக்டர்களில் சவுடு மண் எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

உடனடியாக காவல் துறையினர் பொக்லைன் இயந்திரம், இரண்டு டிராக்டர்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வாகன ஓட்டுநர்கள் கீழ்மாத்தூர் ஜெயபிரகாஷ், மேமாத்தூர் மணிகண்டன், வேல்முருகன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு பாஜக சார்பில் தர்ப்பணம்!

ABOUT THE AUTHOR

...view details