தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் திருமணம் செய்த பெண்ணைத் தூக்கிய பெற்றோர் - சினிமா காட்சிகளை மிஞ்சும் வீடியோ

நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்ய சென்ற மகளை சினிமா படம் பாணியில் பெண்ணின் தந்தை இழுத்துச் சென்று காரில் ஏற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெண்ணை இழுத்துச் செல்லும் வீடியோ
பெண்ணை இழுத்துச் செல்லும் வீடியோ

By

Published : Oct 12, 2021, 5:46 PM IST

நாகப்பட்டினம்: செம்பியன் மாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர், மதன்ராஜ். இவர் திருச்சியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அதே நிறுவனத்தில் திருச்சி மாவட்டம், கீரனூர் பகுதியைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணும் பணியாற்றியுள்ளார். இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து திருச்சியிலிருந்து பாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மகளைக் காணவில்லை என பாரதியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். மேலும், பல்வேறு இடங்களில் விசாரித்ததில் மதன்ராஜ், பாரதியுடன் பழகியது தெரியவந்துள்ளது.

மகளை இழுத்துச் சென்ற தந்தை

இதனையடுத்து பாரதியின் பெற்றோர் இன்று (அக்.12) நாகப்பட்டினத்திலுள்ள மதன்ராஜ் வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது, மதன்ராஜுக்கும், பாரதிக்கும் தாலிக்கட்டி திருமணம் முடிந்த நிலையில், இன்று நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணப்பதிவு செய்ய சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இதையறிந்து உடனடியாக சார்பதிவாளர் அலுவலகம் வந்த பாரதியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், அலுவலகத்திற்கு உள்ளே புகுந்து சினிமா பாணியில் பாரதியை இழுத்துச் சென்றனர்.

பின்னர், நீதிமன்ற வளாகத்தில் இருந்து, அவர்களது காரில் பாரதியை ஏற்றியபோது, அங்கிருந்த பொதுமக்கள் காரை மறித்துள்ளனர்.

காவல் துறை விசாரணை

இதனையறிந்து நீதிமன்றத்தில் இருந்த பெண் காவலர்கள், பாரதியின் பெற்றோரிடம் விசாரித்துள்ளனர். அப்போது பாரதி தன்னைக் கடத்துவதாக காவலரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பாரதியை மீட்டு நாகை போக்சோ நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

பெண்ணை இழுத்துச் செல்லும் வீடியோ

மேலும், நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பாரதி, அவரது பெற்றோரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:காதல் திருமணம் செய்துகொண்ட மகள்; மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details