மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புங்கனூர் ஊராட்சி சார்பாக சாலை ஓரங்களில் 20 ஆயிரம் பனை விதை விதைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட திட்டத்தை நாகப்பட்டினம் ஆட்சியர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது ‘மண் காக்க மாபெரும் பணியாய் ஒன்றாய் இணைந்து கரம் கோர்த்து பனை நடுவோம் வாருங்கள்’ என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
மேலும் இயற்கை சீற்றங்களைத் தாங்கி நிற்கக்கூடியது பனைமரம் என்பதால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பனை விதைகளை விதைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடந்து, பனை விதைகளை விதைக்க முன் வருவோம் என்று மக்களிடம் பனை விதைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பொது இடங்கள், வயல் வரப்புகளில் பனை போட்டுத் தருவதாகவும் கிராமங்கள், நகரங்கள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.