தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 7, 2021, 11:04 PM IST

ETV Bharat / state

பிராண வாயு உற்பத்தி மையம்; பிரதமர் காணொலி காட்சி மூலம் திறந்து வைப்பு

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிராண வாயு உற்பத்தி மையத்தை (Oxygen Plant) பிரதமர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பங்கேற்றனர்.

Oxygen Plant
Oxygen Plant

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் வசதிகள் இருந்தும் போதிய ஆக்ஸிஜன் வசதி இல்லாமல் இருந்தது.

கரோனா காலகட்டத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகளும் மருத்துவர்களும் பெரும் அவதியடைந்தனர்.

இந்நிலையில் பாரத பிரதமரின் நலத்திட்டத்தின்கீழ் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் வழங்கபட்டது.

அனைத்து நிர்மாணப் பணிகளும் முடிந்த நிலையில், இன்று(அக்.7) பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்பணித்தார்.

இதற்கான விழா சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் லலிதா ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை தொடங்கி வைத்தார்.மேலும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மகேந்திரன் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் இயங்குவதால் கூடுதல் நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details