தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 9, 2020, 1:34 PM IST

ETV Bharat / state

வெளிமாநில பக்தர்கள் இன்றுமுதல் வேளாங்கண்ணி ஆலயத்தில் வழிபட அனுமதி

நாகை: வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வழிபட இன்றுமுதல் அனுமதிக்கப்பட்ட தால் பக்தர்கள் குவிய தொடங்கினர்.

வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வழிபட இன்று முதல் அனுமதி
வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வழிபட இன்று முதல் அனுமதி

தமிழ்நாடு அரசு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்கலாம் என அறிவித்தது. இருப்பினும், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நடைபெற்றுவந்த காரணத்தால், வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்கள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆண்டு பெருவிழா நேற்றுடன் நிறைவுற்றதையடுத்து, இன்றுமுதல் வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வழிபாடு செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை முதல் சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வரத்தொடங்கியுள்ளனர்.

இன்று அதிகாலை ஆலயம் திறக்கப்பட்டு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் தகுந்த இடைவெளியுடன் அருட்தந்தையர்கள், கன்னியாஸ்திரிகள், பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று மாதாவை தரிசித்தனர். வெளிமாநில, மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இன்றுமுதல் வேளாங்கண்ணியில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், மெழுகுவர்த்தி உள்ளிட்ட காணிக்கை நிலையங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன.

வெளிமாநில, மாவட்டத்திலிருந்து வருகைதரும் பக்தர்களுக்கு கிருமிநாசினி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாவாசிகள் தகுந்த இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வழிபட வேண்டும் எனப் பேராலய அதிபர் பிரபாகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு மாதாவை தரிசித்தது மன திருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக வெளி மாவட்ட பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details