தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 18, 2019, 2:42 PM IST

ETV Bharat / state

சீர்காழியில் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்!

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

kodiyampalayam local body election
kodiyampalayam local body election

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் அமைந்துள்ளது. மூன்று பக்கம் கடலாலும் ஒருபக்கம் உப்பனாறாலும் சூழ்ந்துள்ள இந்த தீவு கிராமத்தில் சுமார் ஆயிரத்து 25 வாக்காளர்கள் உள்ளனர். இந்தக் கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற 27ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16ஆம் தேதி முடிவடைந்துள்ள நிலையில் 17ஆம் தேதி மனுக்கள் மீதான மறுபரிசீலனை நடைபெற்றது.

இந்நிலையில், கொடியம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காமராஜ் என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ய எவரும் வராததால் ஊராட்சி மன்றத் தலைவராக கிராம மக்களால் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோன்று இந்த கிராமத்தில் மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன.

இந்த ஆறு வார்டுகளிலும் தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் பதவியைப் போன்றே இவர்களை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் இவர்கள் அனைவரும் ஏக மனதாக வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு உள்ளாட்சித் தேர்தலுக்கும் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சுழற்சி முறையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஏக மனதாக ஒருவரைத் தேர்ந்தெடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய இக்கிராமத்தில் முடிவு எடுப்பார்கள். அதேபோல் இந்த வருடமும் ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்களை ஏக மனதாக இக்கிராம மக்கள் தேர்ந்தெடுத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பஞ்சாயத்துத் தலைவர் பதவி - சுயேச்சை வேட்பாளரை மிரட்டிய தேர்தல் அதிகாரி!

ABOUT THE AUTHOR

...view details