தமிழ்நாடு

tamil nadu

தடைசெய்யப்பட்ட வலைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும்: நடுக்கடலில் மோதிக்கொண்ட மீனவர்கள்

By

Published : Mar 19, 2020, 10:40 AM IST

நாகப்பட்டினம்: மீனவர்கள் நடுக்கடலில் மோதிக்கொண்டதால் தரகம்பாடி பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ngp
ngp

நாகை மாவட்டம் தரங்கம்பாடி, சீர்காழி, வேதாரண்யம் தாலுகாக்களைச் சேர்ந்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலை, அதிவேக இன்ஜின் பொருத்திய விசைப்படகுகள் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி மீன்பிடிக்கக்கூடாது என வலியுறுத்திவருகின்றனர்.

ஆனால், ஒருசில மீனவ கிராமங்களில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலை, அதிவேக சீன இன்ஜின்களைப் பயன்படுத்தி மீன்பிடித்துவருவது தொடர்கிறது.

இந்நிலையில், தரங்கம்பாடி கடல்பகுதியில் படகுகளில் இரட்டைமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கப்படுவதாகத் தரங்கம்பாடி மீனவர்கள், மீன்வளத் துறை அலுவலர்கள், காவல் துறையினருக்கு தகவல் கிடைந்துள்ளது.

இதனையடுத்து இவர்கள் கடலுக்குச்சென்றனர். அங்கு 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி கடலூர் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.

உடனே அங்கு சென்ற அலுவலர்கள் மீனவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால், அலுவலர்களின் எச்சரிக்கையினை மீனவர்கள் பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து தடைசெய்யப்பட்ட சுருக்குவலையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், வாக்கி டாக்கி மூலம் சுருக்கு வலைக்கு ஆதரவாக உள்ள மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் தரங்கம்பாடி மீனவர்களுக்கும் சுருக்குமடி, இரட்டை மடி வலைக்கு ஆதரவாக உள்ள கடலூர் பூம்புகார் தொகுதி மீனவர்களுக்கும் நடுக்கடலில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தரகம்பாடி பகுதியில் குவிக்கப்பட்டுள்ள காவல் துறையினர்

இதன் காரணமாக காவல் துறையினர் மீனவர்களை கைதுசெய்ய முற்பட்டபோது மீனவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். அதன் பின்னர் அவர்களின் படகை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

மீனவர்களின் மோதல் காரணமாக தரங்கம்பாடி பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் வாக்கி டாக்கிகளை உபயோகித்து, மீனவர்கள் நடுக்கடலில் மோதலில் ஈடுபட்டுவருவது கவலை அளிப்பதாவும், அரசு உடனடியாக இந்தப் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:'கரோனாவா? மீன்பிடிக்கப் போ!' - தமிழ்நாட்டு மீனவர்களை வலுக்கட்டாயமாகத் தள்ளும் அரேபியா!

ABOUT THE AUTHOR

...view details