தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கு உத்தரவு: வெறிச்சோடிய மாயவரம்!

நாகப்பட்டினம்: ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளதால் மயிலாடுதுறை நகர்ப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

By

Published : Mar 27, 2020, 10:17 AM IST

Published : Mar 27, 2020, 10:17 AM IST

2வது நாள் ஊரடங்கு உத்தரவு ஹெலிகேம் ஷாட் 2வது நாள் ஊரடங்கு உத்தரவு 2nd Day Of Curfew Nagapattinam Curfew நாகப்பட்டினம் ஊரடங்க் உத்தரவு
Nagapattinam Curfew

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு, 21 நாள்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கான கடைகள் மட்டுமே திறந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, நகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் இணைந்து நகர் முழுவதும் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் அடித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

வெளிச்சோடி காணப்படும் மாயவரம்

நகரின் முக்கியப் பகுதியான பழைய பேருந்து நிலையம், மணிக்கூண்டு, மாயூரநாதர் கோயில், பட்டமங்கலம் தெரு உள்ளிட்டப் பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதையும் படிங்க:'கழுகுப்பார்வையில் யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது' - இது காவல் துறையின் பிக்பாஸ்!

ABOUT THE AUTHOR

...view details