நாகப்பட்டினம்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 79 லிட்டர் பாண்டி சாராயம், 695 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், “நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டில் கடந்த 12 மாதங்களில் மட்டும் கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 44 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கஞ்சா வழக்கில் 116 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 695 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மணல் கடத்தலில் 19 பேர் கைது:புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 லட்சத்து 58 ஆயிரத்து 79 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாரயம், 17 ஆயிரத்து 373 வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 ஆயிரத்து 899 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய 15 கார், 13 ஆட்டோ, 292 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது.
தடை செய்யப்பட்ட லாட்டரிச்சீட்டு விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என 589 நபர்களும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 19 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 13 டிராக்டர்கள், 3 ஜேசிபி இயந்திரங்கள், ஒரு டிப்பர் லாரி, 1 மினி வேன், 4 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. விபச்சார வழக்கில் 13 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பாதுகாப்பு பணியில் 500 போலீசார்:விதியை மீறி வாகனங்கள் இயக்கியது தொடர்பாக 67 ஆயிரத்து 283 வழக்குகள் பதியப்பட்டு, 63 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் அபாரதம் பெறப்பட்டு உள்ளது” என்று கூறினார். இதனை தொடர்ந்து 2024 ஆங்கிலப் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், “ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 500க்கும் அதிகமான போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.