தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத விரக்தி: மாணவி தற்கொலை முயற்சி

நாகை: பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க 8 ஆம் வகுப்பு மாணவிக்குத் தனியார் பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து விரக்தியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

nagai girl suicide attempt for not participating in online exams
nagai girl suicide attempt for not participating in online exams

By

Published : Jul 13, 2020, 9:04 PM IST

Updated : Jul 13, 2020, 10:53 PM IST

நாகை மாவட்டம், நாகூர் அடுத்துள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரது மகள் ஹரினி. இவர் நாகை வடகுடியில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

கரோனா பரவல் காரணமாக, தற்போது பள்ளி விடுமுறையில் ஆன்லைனில் வகுப்புகள், தேர்வுகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, வரும் வாரம் ஆன்லைன் தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில், ஆன்லைன் மாதிரி தேர்வு பயிற்சி வகுப்புகளை பள்ளி நிர்வாகம் இன்றிலிருந்து (ஜூலை 13) தொடங்கியுள்ளது.

மாணவியின் தந்தை.

இந்தநிலையில், கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்தினால் மட்டுமே ஆன்லைன் தேர்வில் பங்கேற்க முடியும் என்ற செய்தியைப் பள்ளி நிர்வாகம் வாட்ஸ்அப் மூலம் அறிவித்துள்ளது. மேலும் எந்த அறிவிப்பும் இல்லாமல் ஆன்லைனில் தேர்வும் நடைபெற்றுள்ளது.

இதனால் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத ஹரினி, மன விரக்தியில் வீட்டின் அறையில் புடவையைக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து சிறுமியைக் காப்பாற்றிய உறவினர்கள், நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் நாகூரை அடுத்த நரிமணம் பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தில், கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் கொடுக்காத காரணத்தால், பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை என்று ஹரினியின் தந்தை விஜயராஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... மாடியிலிருந்து குதித்த கரோனா நோயாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

Last Updated : Jul 13, 2020, 10:53 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details