நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் மீனவ கிராமத்தில் அமையவுள்ள தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் சில்லறை டீசல் விற்பனை நிலையத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று (ஜன. 3) அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், “திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பெண் தாக்கப்பட்டதற்கு, கருத்து சொல்ல, கேள்வி கேட்க அனுமதி இல்லை, ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டு ஒரு பெண் என்றும் பாராமல் தாக்கப்பட்டுள்ளார். அது கிராமசபையா? அல்லது திமுக சபையா?.