குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசன விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு, மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் மனவேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், 8 மாதங்களாகியும், காவிரி மேலாண்மை வாரியம் கூட்டத்தை மத்திய அரசு கூட்டாமல் அதன் தலைவரையும் நியமிக்காமல் இருப்பது ஏன்? டெல்டா விவசாயிகள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறுவை சாகுபடி நடைபெறுமா..? - விவசாயிகள் கலக்கம்!
நாகப்பட்டினம்: காவிரி மேலாண்மை வாரியம் கூட்டத்தை 8 மாதங்களாகியும் மத்திய அரசு கூட்டாமல் இருப்பதால், டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்வது கேள்விக்குறியாகியுள்ளது.
டெல்டா மாவட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை கூட்ட தமிழக அரசு மத்திய அரசுக்கு உடனடியாக அழுத்தம் தருவதுடன் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் கூட்டத்தை 8 மாதங்களாகியும் மத்திய அரசு கூட்டாமல் இருப்பதால், டெல்டா மாவட்டத்தில் எட்டாவது ஆண்டு குறுவை சாகுபடி நடைபெறுமா? என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.