நாகை மாவட்டத்தைப் பிரித்து 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறையை சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதன் மூலம் 25 ஆண்டுகளாக போராடி வந்த மயிலாடுதுறை கோட்ட மக்களின் கனவு இன்று நிறைவேறியது.

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தும், முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: புதிய விடுதி கோரி உடைமைகளுடன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்