நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமைதிப் பேரணியில் பங்கேற்றார்.
இதன்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மக்களின் போராட்டங்களைக் கருத்தில்கொண்டு காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் கொண்டுவந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் சட்ட வல்லுநர் குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரைப்படி சட்டம் ஏற்றப்படும் என்று கூறியிருப்பது பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. ஏனெனில் தமிழர்களுக்கு நல்லது நடப்பதை தடுப்பதற்காகப் பல அதிகார சக்திகள் இம்மண்ணில் உள்ளன.
நிபுணர் குழு வேண்டாம், ஜெயலலிதா பிறப்பித்த தடை ஆணையே போதும்! 2015 அக்டோபர் 8ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தடை ஆணை பிறப்பித்துள்ளார். இது வல்லுநர் குழுவால் அமைக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டதாகும். அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே சிறப்புச் சட்டத்தை நிறைவேற்றலாம். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சிறப்புச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடிய கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : ‘எரிமலை ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்’ - வைகோ காட்டம்