தமிழ்நாடு

tamil nadu

மது கடத்தலைத் தடுக்க 7 எல்லை சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு

By

Published : May 7, 2020, 9:03 PM IST

நாகை: தமிழ்நாட்டிலிருந்து காரைக்காலுக்கு மதுபானங்கள் கடத்தி வரக்கூடும் என்பதால், காரைக்காலில் உள்ள 7 எல்லை சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுபான கடத்தலை தடுக்க 7 எல்லை சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
மதுபான கடத்தலை தடுக்க 7 எல்லை சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் மதுபான கடைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதியிலிருந்து காரைக்காலுக்கு தமிழ்நாட்டு மதுபாட்டில்கள் கடத்த வாய்ப்பு உள்ளதால், காரைக்காலில் உள்ள 7 எல்லை சோதனைச் சாவடியிலும் காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மதுபான கடத்தலைத் தடுக்க 7 எல்லை சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு

காரைக்காலுக்கு வரும் வாகனங்களைத் தீவிர சோதனைக்குப் பின்பே அனுமதித்து வருகிறார்கள். இதேபோல் தமிழ்நாட்டு எல்லையிலும் காரைக்காலுக்குச் செல்லும் வாகனங்களை சோதனை செய்த பின்பே அனுமதித்து வருகின்றனர்.

மேலும் காரைக்காலுக்கு கடல் வழியாகவும் தரை வழியாகவும் தமிழ்நாட்டிலிருந்து யாரேனும் மதுபான பாட்டில்கள் கொண்டு வருகிறார்களா என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வீர வல்லவன் தலைமையில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

சட்டவிரோதமாக பதுக்கியிருந்த 2,160 மதுபாட்டில்கள் பறிமுதல்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details