தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதாளசாக்கடை குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி ஆய்வு!

நாகை: மயிலாடுதுறையில் பாதாளசாக்கடை குழாய் உடைப்பு சரிசெய்யும் பணிகளை நகராட்சி நிர்வாக கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.

நகராட்சி நிர்வாக கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு
நகராட்சி நிர்வாக கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு

By

Published : Dec 11, 2019, 8:01 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் இரண்டு ஆண்டுகளாக பாதாளசாக்கடை குழாய்கள் உடைந்து, சாலைகளில் பெரிய பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சரி செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் நகரில் பல இடங்களில் ஆள்நுழைவு தொட்டிகள் வழியாக கழிவுநீர் வழிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவி வருகிறது. தரங்கம்பாடி சாலையில் கடந்த மாதம் பாதாளசாக்கடை குழாய் 14ஆவது முறையாக உடைந்து சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு ஒருமாதமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது குழாய் உடைப்பு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நகராட்சி நிர்வாக கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு

இந்நிலையில் பாதாளசாக்கடை பிரச்னை குறித்து சென்னையிலிருந்து நகராட்சி நிர்வாக கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை தலைமை பொறியாளர் எஸ்.சேட்டு ஆகியோர் தலைமையில் அந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க...அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details