நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரிக்கரை திம்ம நாயக்கன் படித்துறை அருகே பிரசித்திப்பெற்ற பிரசன்ன சின்ன மாரியம்மன் கோயில் உள்ளது.
நாகை மாரியம்மன் கோயிலில் கரகம் ஏந்தி தீ மிதித்த பக்தர்கள்
நாகை: மயிலாடுதுறையில் பிரசன்ன சின்ன மாரியம்மன் கோயிலில், பக்தர்கள் அலகு குத்தியும், கரகம் ஏந்தியும் தீக்குண்டத்தில் தீ மிதித்தது காண்போரை பக்தியில் மெய்சிலிர்க்க வைத்தது.
நாகையில் மாரியம்மன் கோயிலில் கரகம் ஏந்தி தீமிதித்த பக்தர்கள்
இக்கோயிலின் 60ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு சக்தி கரகம், காப்பு கட்டிய பக்தர்கள் காவிரி கரையில் இருந்து புறப்பட்டு வீதி உலாவாக கோயிலை வந்தடைந்தனர்.
அதன்பின் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் சில பக்தர்கள் 20 அடி நீள அலகை வாயில் குத்தி தீ மிதித்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.