நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி, தீபன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செருதூரைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேர் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று நாகையிலிருந்து நேர் கிழக்கே 67 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் படகில் ஓரம் நின்று கொண்டிருந்த செருதூரையைச் சேர்ந்த மீனவர் செல்வமணி திடீரென நிலைதடுமாறி கடலில் தவறி விழுந்தார்.
நடுக்கடலில் மூழ்கி மீனவர் மரணம் - சோகத்தில் சக மீனவர்கள்
நாகப்பட்டினம்: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர் ஒருவர், கடலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை சற்றும் எதிர்பாராத சக மீனவர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், செல்வமணி காலில் மீன்பிடி வலை சிக்கியதால், அவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிரிழந்தவரின் உடலை மீட்ட சக மீனவர்கள் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், செல்வமணியன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் உயிரிழந்த சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.