மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாகப் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டம் தொடங்கியதிலிருந்து பல்வேறு பிரச்னைகள் எழுந்துவரும் நிலையில் கடந்த ஓராண்டாக பாதாளச்சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்படுவதும் அதனால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது.
பாதாளச் சாக்கடை ஆள்நுழைவு தொட்டி வழியே வெளியேறும் கழிவுநீர், சாலைகளிலும் குடியிருப்புகளிலும் சூழ்ந்துநின்று பொது சுகாதாரத்திற்கு சவாலாக விளங்குகிறது. மேலும், பாதாளச் சாக்கடை பிரச்னைகளைத் தீர்க்கக்கோரி மயிலாடுதுறையில் தினசரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.