தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது - விவசாயிகள் வேதனை!

மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் வடிகால், வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் மழை நின்ற பின்பும் நீர் வடியாமல் 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது என விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

30 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளது விவசாயிகள் கவலை
30 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளது விவசாயிகள் கவலை

By

Published : Nov 11, 2021, 3:35 PM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை, கடந்த 15 நாள்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி பயிர்களை நீர் சூழ்ந்துள்ளது. இதில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமான பயிர்கள் அழுகிய நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

'30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது' - விவசாயிகள் வேதனை

மழைநீரை வடியவைக்கும் முயற்சியில் விவசாயிகள்

நேற்று (நவம்பர் 10) காலை முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை இல்லாததால், விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உள்ள மழைநீரை வடியவைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை அருகே அருவாப்பாடி, கொற்றவநல்லூர், கீழமருதாநல்லூர், பொன்வாசநல்லூர், ராதாநல்லூர், வில்லியநல்லூர், உச்சிதமங்கலம், தாழஞ்சேரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அப்பகுதியிலுள்ள வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால், வாய்க்கால் நிரம்பி நீர் ஓடுவதால், வயலில் சூழ்ந்துள்ள நீர் வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில், வாய்க்கால்களில் தேங்கியுள்ள மழை நீரை வடியவைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:வெள்ளத்தில் சிக்கிய தாய் - குழந்தையை மீட்ட பேரிடர் மீட்பு குழு

ABOUT THE AUTHOR

...view details