நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோயிலில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
'நர்சரிப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும்'
நாகப்பட்டினம்: நர்சரிப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆங்கிலவழி பள்ளிகளின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய அவர், "நர்சரிப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். அரசின் அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகள் முடிவடைந்த பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கவேண்டும். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் 2017-18 மற்றும் 2018-19 ஆகிய இருகல்வி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தொகை ரூ.650 கோடியை இந்த ஆண்டு வழங்குவதாக அறிவித்தபடி அரசு வழங்க வேண்டும்'' என்றார்.
இதையும் படியுங்க:சிங்கத்துக்கே பயம் காட்டிய சிங்கக் குருளை...! - வைரல் காணொலி
TAGGED:
latest nagai district news