நிவர் புயலை அடுத்து வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை, சீர்காழி தாலுகாவில் நேற்றிரவு முதல் இடியுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம், திருமுல்லைவாசல், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இடியுடன் கூடிய மழை: வீட்டிலிருந்த மின்சாதனங்கள் பழுது
நாகப்பட்டினம்: நேற்றிரவு (நவ.29) முதல் மிதமான மழையுடன் இடையிடையே இடியும் விழுந்ததால் வீட்டிலிருந்த மின்சாதனங்கள் பழுதாகின.
இடியுடன் கூடிய மழையில் வீட்டிலிருந்த மின்சாதனங்கள் பழுது
ஒருபுறம் மிதமான மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மறுபுறம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் ஷேக் அலாவுதீன் என்பவரது மாடி வீட்டின் மீது இடி விழுந்ததில், அவர் வீட்டில் இருந்த மீட்டர் பாக்ஸ் வெடித்து மின் சாதனங்கள் பழுதாகின.