நாகை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் வாக்குப் பெட்டிகள் தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று அங்கிருந்த வாக்குப் பெட்டியின் சீல் பிரிக்கப்பட்டு வாக்குகள் மாற்றப்படுவதாகத் தகவல் பரவியுள்ளது.
இதனையடுத்து, அந்த கல்லூரியில் திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது.
சீர்காழியில் ஊராட்சி ஆணையர்கள் பணியிடமாற்றம் தொடர்ந்து, திமுக நாகை மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர்களான கஜேந்திரன், ரெஜினா ராணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்மென கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், கஜேந்திரன், ரெஜினா ராணி ஆகியோரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: காவலர் தற்காலிக பணியிடை நீக்கம்!