தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக அங்கன்வாடி மையங்களில் புதியதாக எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை இந்தாண்டு முதல் தொடங்கியுள்ளது. அதன்படி அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் உதவி ஆசிரியர்கள், அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு மாண்டிசோரி முறையில் வகுப்பு எடுக்க உத்தரவிட்டுள்ளது.
ஆசியரியர்களுக்கான ஆடல், பாடல் கற்பித்தல் பயிற்சி!
நாகை: ஆசிரியர்கள் ஆடல், பாடலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் பயிற்சி வகுப்பு காடம்பாடியில் நடைபெற்றது.
ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கும் அலுவலர்
இதையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள 29 அங்கன்வாடி மையங்களில் உள்ள எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க உள்ள ஆசிரியருக்கான பயிற்சி வகுப்புகள், நாகை காடம்பாடியில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் மாணவர்கள் எளிதில் புரிந்துகொண்டு பாடத்தை ஆர்வத்துடன் கற்பதற்காக ஆடல், பாடலுடன் சொல்லிக் கொடுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.