தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகப்பட்டினத்தில் 11 பேருக்கு கரோனா உறுதி

நாகப்பட்டினம்: சீர்காழி நகர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்ட பகுதிகளை அம்மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.

By

Published : Apr 7, 2020, 9:29 PM IST

nagapattinam
nagapattinam

டெல்லி சென்று திரும்பிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் சீர்காழி சபாநாயகர் தெருவில் அவரது மாமியார் வீட்டில் 15 நாட்கள் தங்கி சென்றுள்ளார். இதனால், தாடாளன் மேலவீதி, கீழவீதி, சபாநாயகர் தெரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வீதிகளை நகராட்சி மற்றும் காவல் துறையினர் தனிமைப்படுத்தி சீல் வைத்தனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அலுவலர்கள் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாகப்பட்டினம் மாவட்டத்தில் 32 பேரை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்ததில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் சீர்காழி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிச் சென்றுள்ளார். இதனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் யார் யார் என்று விசாரணை செய்து வருகிறோம். அவரது உறவினர் வீட்டைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதியும் தனைமைப்படுத்தப்பட்டு 28 நாட்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பார்வையிட்ட ஆட்சியர்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் 2,545 வீடுகள் உள்ளன. அந்த வீடுகளுக்கு 28 மருத்துவக் குழுக்கள் நேரடியாகச் சென்று நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளதா? இல்லையா என்பதைக் கண்டறிந்து வருகின்றனர். சீர்காழி பகுதி மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:கோவிட்-19 வைரசை எதிர்கொள்ள உதவும் டிஜிட்டல் தளம்

ABOUT THE AUTHOR

...view details