தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவலோகநாதர் சுவாமி திருக்கோயிலில் ரூ.3.20 கோடி மதிப்பில் திருமண மண்டபம் - முதல்வர் அடிக்கல் நாட்டினார்

சீர்காழி அருகே திருப்புங்கூர் அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயிலில் 3.20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணிக்கு காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளனர்.

திருமணம் மண்டபம் கட்டும் பணிக்கு காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்
திருமணம் மண்டபம் கட்டும் பணிக்கு காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்

By

Published : Dec 17, 2022, 5:57 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த திருப்பங்கூர் அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நந்தனாருக்கு நந்தி விலகி நின்ற புகழ் பெற்ற ஸ்தலத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(டிச.17) நடைபெற்றது.

தலைமை கழகச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் 3.20 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திருமண மண்டப கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருப்பங்கூர் அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் , சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி புதிய திருமண மண்டபத்திற்கான பூமி பூஜையில் அடிக்கல் நாட்டினர்.

இந்நிகழ்ச்சியில் சீர்காழி வருவாய்க் கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details