தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் களைகட்டிய காவிரி துலா உற்சவம்!

நாகை: ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் கோயில்கள் மின்விளக்குளால் அலங்காரம் செய்யப்பட்டு, மின்னொளியில் ஜொலிக்கின்றன.

cauvery-tula-festival-celebration-in-mailaduturai

By

Published : Nov 16, 2019, 11:25 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் துலா மாதமான ஐப்பசி மாதத்தில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொண்டதாக நம்பிக்கை.

துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் மயூரநாதர் கோயில், வதான்யேஸ்வரர் கோயில், ஐயாறப்பர் கோயில், விஸ்வநாதர் கோயில் ஆகிய சிவாலயங்களிலும் பரிமள ரெங்கநாதர் கோயிலிலும் இன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.

களைகட்டிய துலா உற்சவம்

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயில்கள் மின்விளக்குளால் அலங்காரம் செய்யப்பட்டு, மின்னொளியில் ஜொலிக்கின்றன. மேலும் வாழைத் தோரணங்கள் கட்டப்பட்டு மயிலாடுதுறையே விழாக்கோலம் பூண்டுள்ளது. வழக்கமாக துலா உற்சவத்துக்கு மாவட்ட நிர்வாகம் மயிலாடுதுறை தாலுகாவில் உள்ளூர் விடுமுறை அளித்துவந்த நிலையில், இந்த ஆண்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படாதது பொதுமக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: கொடியேற்றத்துடன் தொடங்கியது வெட்டுர்ணிமடம் கிறிஸ்து அரசர் திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details