தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 24, 2020, 5:23 PM IST

ETV Bharat / state

கடலோர மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்

நாகப்பட்டினம்: நிவர் புயல் காரணமாக நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட ஏழு கடலோர மாவட்டங்களில் இன்று (நவ.24) பிற்பகல் முதல் பேருந்து சேவை நிறுத்தப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

நாகையில் பேருந்து சேவை நிறுத்தம்
நாகையில் பேருந்து சேவை நிறுத்தம்

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் இன்று (நவ.24) மாலை தீவிர புயலாக வலுப்பெற்று, மாமல்லபுரம்-காரைக்கால் இடையே நாளை (நவம்பர் 25) மாலை தீவிர புயலாகக் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிவர் புயல் கரையை கடக்கும்போது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கடலோரம் உள்ள ஏழு மாவட்டத்தில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் இன்று மதியம் ஒரு மணி முதல் அரசு, தனியார் என 440 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் மயிலாடுதுறை, சீர்காழி, பொறையாறு உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் அனைத்தும் அரசு பனிமனையில் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை பனிமனையில் 78 பேருந்துகளும் பொறையார் பனிமனையில் 23 பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று (நவம்பர் 24) மாலை முதல் காற்றுடன் மழை வரக்கூடும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நிவர் புயல் எதிரொலி: பேரிடர் மீட்பு குழு புதுச்சேரி வருகை

ABOUT THE AUTHOR

...view details