தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதுகாப்பில்லாத பாலம் கட்டும் பணி: நிலைதடுமாறி கீழே விழுந்தவர் உயிரிழப்பு

வேதாரண்யம்: உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில்லாமல் பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தில், நிலைதடுமாறி கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாதுகாப்பில்லாத பாலம் கட்டும் பணி நடைபெறுகின்ற இடம்
பாதுகாப்பில்லாத பாலம் கட்டும் பணி நடைபெறுகின்ற இடம்

By

Published : Mar 12, 2020, 2:42 PM IST

நாகப்பட்டினம், வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கு கிராமத்தில் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த கத்தரிப்புலம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிலைதடுமாறி பாலத்திற்காகத் தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்தார்.

பாதுகாப்பில்லாத பாலம் கட்டும் பணி நடைபெறுகின்ற இடம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து, அப்பகுதி மக்கள் கூறும்போது, பணி நடைபெறும் இடத்தில் தடுப்புகள் அமைக்கவில்லை.

சரியான மாற்று பாதை ஏற்படுத்தித் தரவில்லை. பாலத்தின் பணி நடைபெறுவதற்கான அறிவிப்புப் பலகைகூட வைக்காமல், சாலையின் நடுவே பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதுவே, விபத்துக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். அடுத்ததாக, இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட வலைகளை பறிமுதல் செய்ய எதிர்ப்பு - தீக்குளிக்க முயன்ற மீனவப் பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details