தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறையில் தகுந்த இடைவெளியின்றி பேருந்து பயணம்!

By

Published : May 7, 2021, 7:14 AM IST

மயிலாடுதுறை: தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் பேருந்தில் பயணம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

’உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கணும்...’; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
’உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கணும்...’; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி நேற்று (மே. 6) முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் அலுவலகங்கள் ஐம்பது விழுக்காடு ஊழியர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.

பேருந்துகளில் ஐம்பது விழுக்காடு பயணிகள் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் இதில் அடங்கும். ஆனால், நேற்று (மே 6) 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்படும் என்பதால் மயிலாடுதுறை கடை வீதியில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடைகள் மூடப்பட்ட பின்னர் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பலர் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் நின்றுகொண்டே பயணம் செய்தனர். கரோனா தொற்றால் பலர் மடிந்து வரும் இந்த சூழலில், விதிகளை கடைபிடிக்காதோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : கரோனா பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details