நாகை மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருபவர் சின்னத்தம்பி, இவருக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. இந்நிலையில், இன்று அதிகாலையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் விசைப்படகு முழுவதுமாக கடலில் மூழ்கியது. இதனைக் கண்ட சக மீனவர்கள் படகின் உரிமையாளரான சின்னத்தம்பிக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதியில் திரண்ட மீனவர்கள் போரடி படகிலிருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், பொருட்களை பைபர் படகு மூலம் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
கடலில் மூழ்கிய ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு
நாகை : கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓரு கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு கடலில் முழுவதுமாக மூழ்கியது.
கடலில் முழ்கிய ஓரு கோடி மதிப்பிலான விசைப்படகு
கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்கும் பணியில் 20 படகுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடலில் மூழ்கி சேதமடைந்த விசைப்படகிற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நம்பியார் நகர் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .