தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் 27 பேர் போட்டி

நாகை: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் இறுதி வேட்புமனு பட்டியலை, மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அலுவலரும், நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அனைத்து கட்சிகள் பிரதிநிதிகள் மத்தியில் அறிவித்தார்.

By

Published : Mar 29, 2019, 9:50 PM IST

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் 27 பேர் போட்டி!

அதன்படி, நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான, கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. அதனை அடுத்து, மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஆசைமணி, திமுக வேட்பாளர் ராமலிங்கம், அமமுக செந்தமிழன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எம். ரீபாயுதீன் மற்றும் சுயேட்சை உள்ளிட்ட 45 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில், 33 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ஆறு சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றதால், 27 வேட்பாளர்கள் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் களம் காண்கின்றனர். இதனையடுத்து, அவர்களுக்கான சின்னத்தை தேர்தல் அலுவலரான நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஒதுக்கீடு செய்தார். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னம் வழங்கப்பட்ட நிலையில், சுயேச்சை வேட்பாளர்களுக்கு அவர்கள் கூறிய முன்னுரிமையின் அடிப்படையில், சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

அப்போது, டிடிவி தினகரன் சென்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று, தற்போது சர்ச்சையில் உள்ள குக்கர் சின்னத்தை தட்சிணாமூர்த்தி, சண்முகம் ஆகிய இரண்டு வேட்பாளர்கள் கேட்ட நிலையில், குலுக்கல் முறையில் சண்முகம் என்ற சுயேச்சை வேட்பாளருக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டது.


ABOUT THE AUTHOR

...view details