தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் கைகோர்த்த 10 சுயேச்சை வேட்பாளர்கள்!

நாகை: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள் 10 பேர் ஒன்றிணைந்து வாக்கு சேகரித்தது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Apr 10, 2019, 9:57 AM IST

10 சுயேட்சை வேட்பாளர்கள் ஒன்றிணைந்து வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்தத் தொகுதியில் மத்திய, மாநில அரசுகளால் கொண்டுவரப்பட்ட ஹைட்ரோகார்பன் மற்றும் ஷேல் கேஸ் திட்டங்களை தடுத்திடவும், காவிரி பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காத்திடவும், மருத்துவக்கல்லூரி, விவசாயக் கல்லூரி அமைக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தி, நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடும் இவர்களுக்கு தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் தங்களது கோரிக்கைகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஒன்றிணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுயேச்சை வேட்பாளர்களான ஹபீப் முகம்மது, ராஜா, அப்துல் பாசித், விசுவநாதன், ராஜேஷ், வாணி தாஸ், தட்சிணாமூர்த்தி, கண்ணபிரான், தேவதாஸ், சாமிதுரை ஆகிய 10 பேரும் நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் தலைமையில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

10 சுயேட்சை வேட்பாளர்கள் ஒன்றிணைந்து வாக்கு சேகரிப்பு

அப்போது அவர்கள் பொதுமக்களிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர். மக்கள் நலனுக்காக கோரிக்கைகளை வலியுறுத்தி சுயேட்சை வேட்பாளர்கள் 10 பேரும் ஒருங்கிணைந்து வாக்கு சேகரித்தது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details