நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மனநலம் பாதிக்கப்பட்டு, பெற்றோர்களை இழந்து அனாதையாக நிற்கும் குழந்தைகளை அறிவகம் காப்பகம் பாதுகாத்து பராமரித்து வருகின்றது. இந்த காப்பகத்தில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாப்பாக பாரமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை அறிவகம் குழந்தைகள் காப்பகம் வாசலில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு காப்பகத்தின் உள்ளே இருந்தவர்கள் சென்று பார்த்தபோது பிறந்து 10 நாட்களே ஆன ஆண்குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது.
உடனடியாக குழந்தையை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஆரோக்கியத்துடன் உள்ளதாக தெரிவித்ததையடுத்து, மயிலாடுதுறை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.