மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 1 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "மதுரையில் கரோனா தடுப்பு பணி இரவு பகலாக மேற்கொண்டதன் பலனாக தொற்று குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்பை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டங்களில் முதலமைச்சர் மேற்கொள்ளும் சுற்றுப்பயனம் மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இ-பாஸ் எந்தவித சிரமமும் இல்லாத வகையில் எளிதாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் உள்நோக்கம் கற்பிப்பது எதிர்கட்சி தலைவரின் வாடிக்கையாக உள்ளது.