கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மதுரை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த மொத்த சில்லறைக் காய்கறிக் கடைகள், தற்காலிகமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மாற்றப்பட்டுள்ளன.
அதேபோன்று பரவை மொத்த காய்கறிச் சந்தையில் தகுந்த இடைவெளி பின்பற்றாததால், அங்கு இயங்கிய 77 சில்லறை விற்பனைக் கடைகள், அப்பகுதியில் உள்ள பாத்திமா கல்லூரி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் பரவை காய்கனி சந்தையை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, ஏ பிளாக்கில் உள்ள வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு கடைகளை அருகில் உள்ள 3.5 ஏக்கர் மைதானத்திற்கு மாற்ற, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால், வியாபாரிகள் கடையை மாற்ற மறுத்து விட்டனர்.
தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காத காரணத்தினால், 44 கடைகளுக்குச் சீல் வைக்க உத்தரவிட்டும், ஏ பிளாக் முழுவதும் தடுப்புகள் கொண்டு அடைத்தும், சீல் வைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:மதுரையில் கரோனா சிகிச்சையிலிருந்த 11 பேர் பூரண குணம்