தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராம மக்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள், ஸ்டாலினின் பொய்யை நம்பி விடுவார்கள்: ஆர்.பி.உதயகுமார்

மதுரை: ஸ்டாலின் கிராமசபை கூட்டம் நடத்தி மக்களிடம் மனுக்களைப் பெறுகிறார். அந்த மனுக்கள் மீதான நிலையை நம்மால் அறிய முடியுமா என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயகுமார்

By

Published : Feb 7, 2019, 11:10 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள உரப்பனூர் பகுதியில் பொங்கல் கோலப் போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அவர் கொண்டு வந்த திட்டங்களை நிறைவேற்றுவார்களா என்று எதிர்க்கட்சிகள் கூறினார்கள். ஆனால் தற்போது உள்ள முதல்வர் 100% திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இதனால் இரட்டை இலையும், அதிமுக அரசையும், தன்னையும் கைவிட்டு விடாதீர்கள் என்று கூறினார்.

ஸ்டாலின் பல இடங்களில் கிராமசபை கூட்டம் நடத்தி வருகிறார், கிராமங்களில் உள்ள மக்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள் எனவே அனைத்தையும் நம்பி விடுவார்கள். உதயகுமார் பொய் கூறலாம் என்று நினைக்கலாம், சீட்டு பிடிப்பவர்கள் முதலில் கிராமங்களிலேயே சீட்டு பிடித்து ஏமாற்றுவார்கள். சீட்டு பிடிப்பவர்களை நம்பினால் பொருளாதாரம்தான் பாதிக்கும் ஆனால் ஓட்டு பிடிப்பவர்களை நம்பினால் வாழ்க்கையையே பாதித்துவிடும். சீட்டு பிடிப்பவர்களும் ஓட்டு பிடிப்பவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று தெரிவித்தார்.

ஸ்டாலின் கிராமசபை கூட்டம் நடத்தி மக்களிடம் மனுக்களைப் பெறுகிறார் அந்த மனுக்கள் மீதான நிலையை நம்மால் அறிய முடியுமா? அதிமுக அரசு மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது இதனை திசை திருப்பவே கிராமசபை கூட்டங்களை ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details