தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை மாநகர போக்குவரத்தில் அதிரடி மாற்றம்!

மதுரை: அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்தில் காவல் துறையினர் அதிரடி மாற்றம் செய்துள்ளனர்.

transport-change-in-madurai-due-to-devar-jeyanthi

By

Published : Oct 28, 2019, 11:18 PM IST

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தல், ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைபெறுகின்ற காரணத்தால் மதுரை மாநகர் போக்குவரத்தில் காவல் துறையினர் மாற்றம் செய்துள்ளனர். அதன்படி,

  • அன்று காலை ஆறு மணி முதல் இரவு 10.30 மணிவரை லாரிகள், கனரக வாகனங்கள் மதுரை மாநகருக்குள் நுழைய தடைசெய்யப்படுகிறது.
  • வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களின் நலன்கருதி அக்டோபர் 30ஆம் தேதி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுப்பாதைகளை தற்காலிகமாகப் பயன்படுத்துமாறு மதுரை மாநகர காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். விழாவிற்கு வரும் வாகனங்களைத் தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதி இல்லை. நத்தம் சாலை, அழகர்கோவில் சாலை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் பெரியார் சிலையில் திரும்பி மாற்றுப்பாதையாக ராஜா முத்தையா மன்றம், கே.கே. நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் பிரதான சாலை, பி.டி.ஆர். பாலம், காமராஜர் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
  • மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நத்தம் சாலைக்கு வரும் வாகனங்கள், ராஜா முத்தையா மன்றம், இளைஞர் விடுதி (YOUTH HOSTEL), பந்தயத்திடல் சாலை (RACE COURSE ROAD), தாமரைத் தொட்டி, புது நத்தம் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்தில் அதிரடி மாற்றம்
  • வடக்கு வெளி வீதியிலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வரும் வாகனங்கள், பாலம் ஸ்டேஷன் சாலை, எம்.எம். லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறமாகத் திரும்பி கான்சாபுரம் சாலை, இ2 சாலை (E2 ரோடு), அரசன் ஸ்வீட்ஸ், பெரியார் மாளிகை வழியாகச் செல்ல வேண்டும்.
  • திண்டுக்கல் ரோடு – தத்தனேரி பகுதியிலிருந்து அழகர்கோவில் சாலை, நத்தம் சாலை செல்லும் வாகனங்கள் குலமங்கலம் சாலை, பாலம் ஸ்டேஷன் சாலை சந்திப்பில் திரும்பி குலமங்கலம் சாலை வழியாகச் சென்று மாற்றுப் பாதைகளில் செல்ல வேண்டும்.
  • மேலமடை பகுதியிலிருந்து கோரிப்பளையம் நோக்கி மதுரை மாநகருக்குள் வரும் வாகனங்கள் ஆவின் சந்திப்பிலிருந்து குருவிக்காரன் சாலை வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.
  • தேவர் ஜெயந்தி விழாவிற்காக நகருக்குள் செல்ல காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர பசும்பொன் செல்லும் இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
  • தேவர் ஜெயந்தி விழாவிற்கு இருசக்கர வாகனத்தில் வருவோரில் இருவருமே தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் வருவோர் அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் சீட் பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details