மதுரை:அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல காலை 6 மணி முதல் 10 மணி வரை மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர்.
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகளுக்கு அனுமதி என்பதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இதனால் பொதுமக்களை விட வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.
அந்த வகையில், மதுரை நகரின் முக்கிய சாலைகள் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டதால், கீழ வெளிவீதி, நெல்பேட்டைப் பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது.
இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க மாநகரப் போக்குவரத்து காவல் துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அனுமதி மறுத்த 9 மருத்துவமனைகள்: ஆம்புலன்ஸில் உயிரிழந்த இளம்பெண்!