தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சீமானை விட அதிகம் தமிழை வளர்த்தவர் திருமலை நாயக்கர்'- அர்ஜுன் சம்பத்

ஆன்மிக அரசியலுக்கு உதாரணமாக இருந்தவர் திருமலை நாயக்கர் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விட அதிகம் தமிழை வளர்த்தவர் திருமலை நாயக்கர் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

arjun sambath
'சீமானை விட அதிகம் தமிழை வளர்த்தவர் திருமலை நாயக்கர்'- அர்ஜுன் சம்பத்

By

Published : Jan 28, 2021, 7:29 PM IST

மதுரை: மன்னர் திருமலை நாயக்கர் 438ஆவது பிறந்தநாள் விழாவிற்கு வருகை தந்த அர்ஜுன் சம்பத் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமிய படையெடுப்பு காலங்களில் எடுக்கப்பட்ட கோயில்களை எல்லாம் மீட்டு உருவாக்கம் செய்தவர் திருமலை நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவர்கள்.

தமிழை வளர்த்து அதனை காத்தவர் திருமலை நாயக்கர். நாயக்கர் ஆட்சியில் ஆன்மிகம் வளர்ந்தது. நாம் தமிழர் கட்சி திருமலை நாயக்கரை தமிழர் இல்லை என்று பரப்புரை செய்துகொண்டிருக்கிறது, சீமானை விட அதிகமாக தமிழை வளர்த்தவர் திருமலை நாயக்கர். ஆன்மிக அரசியலுக்கு உதாரணமாக இருந்தவர் நாயக்கர், மதமாற்றம் தடை செய்யப்படவேண்டும் கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு உதாரணமாக இருக்கும் திருமலை நாயக்கர் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

'சீமானை விட அதிகம் தமிழை வளர்த்தவர் திருமலை நாயக்கர்'- அர்ஜுன் சம்பத்

பாகிஸ்தான், சீனா தூண்டுதலின் பெயரில் விவசாயிகள் டிராக்டர் பேரணி செங்கோட்டையில் தேசியக் கொடியை கழட்டிவிட்டு பிரிவினைவாத கொடியை ஏற்றி உள்ளனர். அவர்களை சுட்டுத் தள்ளி இருக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா இதை கையில் எடுத்திருக்க வேண்டும், அமித்ஷா, மோடி இரும்பு கரம் கொண்டு கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறக்கூடாது. ஜல்லிக்கட்டை தடை செய்த ராகுல் காந்தி ஜல்லிக்கட்டைப் பார்க்க வந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து மதுரைக்கு வந்தவர் பத்து நாள்கள் தனிமை படுத்தி கொள்ளாமல் அரசியல் செய்வதற்காக மதுரைக்கு வந்து உள்ளார்.

தமிழ்நாட்டிற்கு ராகுல் மீண்டும் வந்தால் கறுப்புக் கொடி காட்டுவோம். ரஜினிகாந்த் அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவர் ஆன்மிக அரசியல் கொள்கையில் இருந்து ஒதுங்கவில்லை. 234 தொகுதிகளிலும் ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலை இந்து மக்கள் கட்சி எடுத்து செல்லும், ரஜினி ரசிகர்களை விலைக்கு வாங்கி திசை திருப்புவதற்கு திமுக முயற்சி செய்கிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details